Saturday, March 15, 2008

காய வாசம்

எல்லாம் உனது
என்றுணர்ந்தபோது
'வெற்றி'யின் துள்ளல் மட்டுமல்ல
'தோல்வி'யின் துவலளும் மறைந்தது.

இரண்டுமற்ற நிலையே
எல்லையில்லா ஆனந்தம்
அன்று அறிய வைத்தாய்;
இன்று உணர வைத்தாய்.

நன்றி கூறக்கூட
இன்றெனக்கு அனுமதியில்லை;
யாருக்கு யார் நன்றி கூற.

இன்னும் ஒன்று மட்டும்
மிச்சம் உள்ளது
பெருங்காய வாசனையாக

விரைவில்
'அதுவும் போய்விடும்'
உன்
அளப்பரிய கருணையினால்.

1 comment:

I AM naagaraa said...

தனிப்பெருங்கருணையாம் வெட்டவெளித் தந்தை
அருட்பெருஞ்ஜோதியாம்
சுத்தவொளித் தாயை அனுப்பி
உம் காயத்தை
அவள் ஒளியில்
கற்பூரம் தீபத்தில் கரைவதைப் போல்
கரைத்துத்
தன்னோடு சேர்த்துக் கொள்வாரென்று
நேர்த்தியோடு கவியில் சொல்லியிருக்கிறீர்

வாழ்த்துக்கள் ஹரன்

அன்புடன்
நான் நாகரா(ந.நாகராஜன்)
நான் வழங்கும் மகாயோகம்
என் கவிதைகள்